• Jun 30 2024

சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

Tamil nila / Jun 27th 2024, 8:28 pm
image

Advertisement

இன்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் பகுதியில், சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது விளான் பகுதியைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ்  என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் இன்றையதினம் சுண்ணாம்பு சூளைக்கு வேலைக்காக சென்றுள்ளார். அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

இந்நிலையில் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு இன்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் பகுதியில், சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். இதன்போது விளான் பகுதியைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ்  என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் இன்றையதினம் சுண்ணாம்பு சூளைக்கு வேலைக்காக சென்றுள்ளார். அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement