• Nov 23 2024

சிறுமியை வாளால் தாக்கி காயப்படுத்திய நபர்..!!

Tamil nila / Jan 15th 2024, 8:21 pm
image

சிறுமியொருவரை வாளால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 11 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த 14 வயது சிறுமி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதையடுத்து, சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதன் போது சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், அவரை இன்று வெலிசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் மேற்கண்ட விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை நீதிமன்றில் வழங்கிய பொலிஸார், சந்தேகநபர் சிறுமியை தாக்க பயன்படுத்திய வாளைக் கண்டுபிடிக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ராகம, பொடிவிகும்புர பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஆவார்.

கடந்த 4 ஆம் திகதி சிறுமி மீதான தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியை வாளால் தாக்கி காயப்படுத்திய நபர். சிறுமியொருவரை வாளால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் 11 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த 14 வயது சிறுமி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதையடுத்து, சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இதன் போது சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், அவரை இன்று வெலிசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் மேற்கண்ட விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.இது தொடர்பான மேலதிக தகவல்களை நீதிமன்றில் வழங்கிய பொலிஸார், சந்தேகநபர் சிறுமியை தாக்க பயன்படுத்திய வாளைக் கண்டுபிடிக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.ராகம, பொடிவிகும்புர பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஆவார்.கடந்த 4 ஆம் திகதி சிறுமி மீதான தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement