மன்னார் நகரசபைக்கு சொந்தமான வீதியில் நடைபாதை நாள் சந்தை அடிப்படையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் உள்நுழைந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டதுடன்,
வியாபாரிகளை அச்சுறுத்தியதாக ஜே.வி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபையினால் ஆண்டுதோரும் பண்டிகை கால வியாபார நடவடிக்கைக்கு என உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் வாடகைக்கு விடப்படுவது வழமை.
அந்தவகையில் இம்முறை கடைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்றது.
இதன்போது குத்தகைக்கு விடப்படும் பகுதியில் இருந்த பெரும்பாலான நடைபாதை வியாபாரிகள், அப்பகுதியில் இருந்து தாமாக நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக வெளியேறியிருந்தனர்.
இருப்பினும் சிலர் அப்பகுதியை விட்டு வெளியேற மறுத்து இன்றையதினம் பொலிஸார் மற்றும் நகரசபை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர்,
அதிகாரிகளுடன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் இருந்த சில வியாபாரிகளுடன் முரண்பாட்டிலும் ஈடுபட்டார்.
அதேநேரம் தான் அங்கே பேசிய விடயங்களை காணொளி எடுக்க முயன்ற ஊடகவியளாலரின் தொலைபேசியையும் தட்டி விட முயற்சி செய்தார்.
அகுறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற முடியாது எனவும் தான் அமைச்சர் மற்றும் ஆளுநரிடம் பேசிவிட்டதாகவும், கடிதம் மாலை வரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இருந்தபோதிலும் ஆளுநர் அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது,
அவ்வாறு எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை, எந்த ஒரு கட்சியின் அரசியல் வாதிகளும் ஆளுநரிடம் இது தொடர்பில் பேசவும் இல்லை என தெரிவித்திருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பொய்யான விடயங்களை தெரிவித்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட நபர் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என பாதிக்கப்பட்ட வியாபரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜே.வி.பியின் அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடியில் ஈடுபட்ட நபர் - மன்னாரில் பரபரப்பு மன்னார் நகரசபைக்கு சொந்தமான வீதியில் நடைபாதை நாள் சந்தை அடிப்படையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் உள்நுழைந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டதுடன்,வியாபாரிகளை அச்சுறுத்தியதாக ஜே.வி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.மன்னார் நகரசபையினால் ஆண்டுதோரும் பண்டிகை கால வியாபார நடவடிக்கைக்கு என உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் வாடகைக்கு விடப்படுவது வழமை.அந்தவகையில் இம்முறை கடைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்றது.இதன்போது குத்தகைக்கு விடப்படும் பகுதியில் இருந்த பெரும்பாலான நடைபாதை வியாபாரிகள், அப்பகுதியில் இருந்து தாமாக நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக வெளியேறியிருந்தனர்.இருப்பினும் சிலர் அப்பகுதியை விட்டு வெளியேற மறுத்து இன்றையதினம் பொலிஸார் மற்றும் நகரசபை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர்,அதிகாரிகளுடன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் இருந்த சில வியாபாரிகளுடன் முரண்பாட்டிலும் ஈடுபட்டார்.அதேநேரம் தான் அங்கே பேசிய விடயங்களை காணொளி எடுக்க முயன்ற ஊடகவியளாலரின் தொலைபேசியையும் தட்டி விட முயற்சி செய்தார்.அகுறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற முடியாது எனவும் தான் அமைச்சர் மற்றும் ஆளுநரிடம் பேசிவிட்டதாகவும், கடிதம் மாலை வரும் எனவும் தெரிவித்திருந்தார்.இருந்தபோதிலும் ஆளுநர் அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது, அவ்வாறு எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை, எந்த ஒரு கட்சியின் அரசியல் வாதிகளும் ஆளுநரிடம் இது தொடர்பில் பேசவும் இல்லை என தெரிவித்திருந்தனர்.மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு பொய்யான விடயங்களை தெரிவித்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட நபர் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என பாதிக்கப்பட்ட வியாபரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.