• May 11 2026

மின்விசிறி கம்பியால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்; தானும் உயிர்மாய்க்க முயற்சி!

Chithra / Nov 18th 2025, 10:36 am
image

 

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டுவ பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று திங்கட்கிழமை (17) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தட்டாமுனை பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவருக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கணவர் மின்விசிறி கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

நீதவான் விசாரணைக்குப் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உயிரிழந்தவரின் கணவரும் விஷம் குடித்து தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25 வயதான குறித்த நபர், பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்விசிறி கம்பியால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்; தானும் உயிர்மாய்க்க முயற்சி  வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டுவ பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று திங்கட்கிழமை (17) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர் தட்டாமுனை பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவருக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கணவர் மின்விசிறி கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீதவான் விசாரணைக்குப் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து உயிரிழந்தவரின் கணவரும் விஷம் குடித்து தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.25 வயதான குறித்த நபர், பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement