• Apr 20 2025

ஓடும் ரயிலில் ஏறி காலை இழந்த நபர்! புத்தாண்டில் நடந்த துயரம்

Chithra / Apr 14th 2025, 9:25 am
image

 

ஓடும் ரயிலில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை ரயில் நிலையத்தில்  இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் ரிதிதென்னை நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மீண்டும் செல்லும்போது வயோதிபர் ஒருவர் ஏற முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், காயமடைந்த 60 வயதுடைய நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வயோதிபரின் இடது கால் சத்திர சிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் ரயிலில் ஏறி காலை இழந்த நபர் புத்தாண்டில் நடந்த துயரம்  ஓடும் ரயிலில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை ரயில் நிலையத்தில்  இடம்பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் ரிதிதென்னை நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மீண்டும் செல்லும்போது வயோதிபர் ஒருவர் ஏற முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில், காயமடைந்த 60 வயதுடைய நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வயோதிபரின் இடது கால் சத்திர சிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now