யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன்,
வீட்டில் தனிமையில் இருந்த யுவதியை மிரட்டி, அவரிடம் இருந்த வங்கி ஏ.டி.எம் அட்டையை பறித்துச் சென்றுள்ளார்.
அது தொடர்பில் யுவதியினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
திருடப்பட்ட வங்கி ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி பல்பொருள் அங்காடி ஒன்றில் இளைஞன் பொருட்களை கொள்வனவு செய்தமை தெரியவந்துள்ளது.
இதனையறிந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடு புகுந்து யுவதியை மிரட்டி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன். யாழில் பரபரப்புச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன், வீட்டில் தனிமையில் இருந்த யுவதியை மிரட்டி, அவரிடம் இருந்த வங்கி ஏ.டி.எம் அட்டையை பறித்துச் சென்றுள்ளார். அது தொடர்பில் யுவதியினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.இம்முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது, திருடப்பட்ட வங்கி ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி பல்பொருள் அங்காடி ஒன்றில் இளைஞன் பொருட்களை கொள்வனவு செய்தமை தெரியவந்துள்ளது. இதனையறிந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.