• Dec 14 2024

கனடாவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி!

Tamil nila / May 30th 2024, 7:00 am
image

கனடாவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முயற்சித்த ஒருவரது வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 

ரொறன்ரோ வடக்கு 400ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் ட்ரக் வண்டிகளும் பிக்கப் ட்ரக் வண்டியொன்றும் மோதிக் கொண்டுள்ளன.

வாகனங்கள் விபத்துக்குள்ளானதை பார்த்த நபர் ஒருவர் தனது வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று உதவ முற்பட்டுள்ளார்.

இதன் போது விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேறி, உதவியவரது வாகனத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன் விபத்துக்குள்ளான பிக்கப் ரக வாகனமும் களவாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இவ்வாறு வாகனத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

   


கனடாவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி கனடாவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முயற்சித்த ஒருவரது வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ரொறன்ரோ வடக்கு 400ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் ட்ரக் வண்டிகளும் பிக்கப் ட்ரக் வண்டியொன்றும் மோதிக் கொண்டுள்ளன.வாகனங்கள் விபத்துக்குள்ளானதை பார்த்த நபர் ஒருவர் தனது வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று உதவ முற்பட்டுள்ளார்.இதன் போது விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேறி, உதவியவரது வாகனத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.அத்துடன் விபத்துக்குள்ளான பிக்கப் ரக வாகனமும் களவாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இவ்வாறு வாகனத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement