• Jun 29 2024

வானிலிருந்து விழுந்த மர்ம பொருள் – செல்பி எடுக்க குவியும் மக்கள்!

Tamil nila / May 30th 2024, 7:42 am
image

Advertisement

திருப்பத்தூர் கிராமத்தில் வானிலிருந்து   மர்ம பொருள் விழுந்துள்ளமை அப் பகுதியில் அனைவரையும்  வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது நிலத்திலிருந்து கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டது போன்ற பயங்கர சத்தம் கேட்டுள்ளது. 

அங்கு சென்று பார்த்தபோது நிலத்தில் 5 அடி ஆழம், 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது.

மேலும், அந்த பள்ளத்திலிருந்து அனல் பறக்கும் வெப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் பள்ளத்திலிருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

வானிலிருந்து எரிகல் விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம். இந்த ஏரிகள் அளவு ஒரு மீட்டர் வரை இருக்கும் என்று தெரிவித்தனர். 

 எரிகல் விழுந்த பகுதிக்கு நேற்று காலை முதல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

எரிகல் விழுந்த இடம் அருகே மக்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதைப்பார்த்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரத்தொடங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 




வானிலிருந்து விழுந்த மர்ம பொருள் – செல்பி எடுக்க குவியும் மக்கள் திருப்பத்தூர் கிராமத்தில் வானிலிருந்து   மர்ம பொருள் விழுந்துள்ளமை அப் பகுதியில் அனைவரையும்  வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது நிலத்திலிருந்து கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டது போன்ற பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது நிலத்தில் 5 அடி ஆழம், 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது.மேலும், அந்த பள்ளத்திலிருந்து அனல் பறக்கும் வெப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் பள்ளத்திலிருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.வானிலிருந்து எரிகல் விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம். இந்த ஏரிகள் அளவு ஒரு மீட்டர் வரை இருக்கும் என்று தெரிவித்தனர்.  எரிகல் விழுந்த பகுதிக்கு நேற்று காலை முதல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.எரிகல் விழுந்த இடம் அருகே மக்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இதைப்பார்த்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரத்தொடங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 

Advertisement

Advertisement

Advertisement