• May 11 2024

கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் 2 ஆண்டு கழித்து உயிருடன் வந்ததால் பரபரப்பு! samugammedia

Tamil nila / Apr 16th 2023, 10:07 pm
image

Advertisement

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் தற்போது உயிருடன் திரும்பி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற பகுதியில் கொரோனா தொற்றால் உயிர் இழந்ததாக கமலேஷ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டார் 

 2021 ஆம் ஆண்டு கமலேஷ் இறந்து விட்டதாக கூறி கொரோனா பாதுகாப்பு விதிகளை காரணம் காட்டி அவரது உடலை உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைக்கவில்லை. மேலும் மருத்துவமனை ஊழியர்களை அவரது உடலை இறுதி சடங்கு செய்து விட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கமலேஷ் உயிருடன் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஒரு கும்பல் போதை மருந்து செலுத்தி வந்தது என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது 

 இதனை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த கமலேஷிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரை போதை பழக்கத்துக்கு அடிமை ஆக்கியது யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் 2 ஆண்டு கழித்து உயிருடன் வந்ததால் பரபரப்பு samugammedia கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் தற்போது உயிருடன் திரும்பி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற பகுதியில் கொரோனா தொற்றால் உயிர் இழந்ததாக கமலேஷ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டார்  2021 ஆம் ஆண்டு கமலேஷ் இறந்து விட்டதாக கூறி கொரோனா பாதுகாப்பு விதிகளை காரணம் காட்டி அவரது உடலை உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைக்கவில்லை. மேலும் மருத்துவமனை ஊழியர்களை அவரது உடலை இறுதி சடங்கு செய்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கமலேஷ் உயிருடன் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஒரு கும்பல் போதை மருந்து செலுத்தி வந்தது என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது  இதனை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த கமலேஷிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரை போதை பழக்கத்துக்கு அடிமை ஆக்கியது யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement