• Dec 03 2024

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஒரு தொகுதி ஏலக்காய் பறிமுதல் - மண்டபம் மரைன் போலீசார் நடவடிக்கை..!samugammedia

Tharun / Jan 30th 2024, 5:48 pm
image

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு  படகில் கடத்த முயன்ற  இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்    மதிப்பிலான  ஏலக்காய் மண்டபம் மரைன் போலிசார் பறிமுதல் செய்துள்ளதுடன்  தப்பி ஓடிய மூவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள குந்துகால்  கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா,    ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள்,  கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சமீப காலமாக பிடிபட்டு வருகிறது.

இதைதொடர்ந்து பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை பகுதியை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இந்திய கடலோர காவல்படை, உளவுத்துறை , மரைன்  போலீஸ் என பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் ,நேற்று (29) நள்ளிரவு  மன்னார்  வளைகுடா கடல் வழியாக  படகில் ஏலக்காய் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குந்துகால் மீன்பிடி  துறைமுக  பகுதியில் மண்டபம் மரைன் போலீசார்   ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது குந்துகால் மீன்பிடி துறைமுகம் பகுதியில் மரைன் போலீசாரை  கண்டதும் 3 நபர்கள்   மூட்டை ஒன்றை விட்டு   தப்பித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த மரைன் போலீசார் அந்த மூட்டையை  சோதனை செய்தபோது அதில் 43 கிலோ ஏலக்காய் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து ஏலக்காய் மூட்டை யை  கைப்பற்றிய மரைன் போலீசார் ஏலக்காய் மூட்டை யை  இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 மேலும் கைபற்றபட்ட  ஏலக்காய் மூட்டை இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கைப்பற்றப்பட்ட ஏலக்காய்   இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும்  மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குந்துகால்  கடற்கரை இலங்கைக்கு கடத்தல்  பொருட்கள் கடத்தும்  முக்கிய கேந்திரமாக மாறியுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஒரு தொகுதி ஏலக்காய் பறிமுதல் - மண்டபம் மரைன் போலீசார் நடவடிக்கை.samugammedia ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு  படகில் கடத்த முயன்ற  இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்    மதிப்பிலான  ஏலக்காய் மண்டபம் மரைன் போலிசார் பறிமுதல் செய்துள்ளதுடன்  தப்பி ஓடிய மூவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள குந்துகால்  கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா,    ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள்,  கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சமீப காலமாக பிடிபட்டு வருகிறது.இதைதொடர்ந்து பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை பகுதியை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இந்திய கடலோர காவல்படை, உளவுத்துறை , மரைன்  போலீஸ் என பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ,நேற்று (29) நள்ளிரவு  மன்னார்  வளைகுடா கடல் வழியாக  படகில் ஏலக்காய் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குந்துகால் மீன்பிடி  துறைமுக  பகுதியில் மண்டபம் மரைன் போலீசார்   ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது குந்துகால் மீன்பிடி துறைமுகம் பகுதியில் மரைன் போலீசாரை  கண்டதும் 3 நபர்கள்   மூட்டை ஒன்றை விட்டு   தப்பித்தனர்.இதனால் சந்தேகமடைந்த மரைன் போலீசார் அந்த மூட்டையை  சோதனை செய்தபோது அதில் 43 கிலோ ஏலக்காய் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.இதையடுத்து ஏலக்காய் மூட்டை யை  கைப்பற்றிய மரைன் போலீசார் ஏலக்காய் மூட்டை யை  இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைபற்றபட்ட  ஏலக்காய் மூட்டை இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.கைப்பற்றப்பட்ட ஏலக்காய்   இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும்  மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.குந்துகால்  கடற்கரை இலங்கைக்கு கடத்தல்  பொருட்கள் கடத்தும்  முக்கிய கேந்திரமாக மாறியுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement