• Apr 03 2025

மன்னாரில் தாய், சேய் உயிரிழப்பு விவகாரம் : உயர் அச்சுறுத்தல் இருப்பதாக வைத்தியர் குற்றச்சாட்டு!

Tharmini / Nov 23rd 2024, 9:07 am
image

மன்னாரில் பிரசவத்திற்கான அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், 

தற்போது அம்மாவட்டத்தின்  வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா இடமாற்றம் கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

தனக்கு உயர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அவர் இந்த கடிதத்தை கையளித்துள்ளார். 

குறித்த கடிதத்தில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தொடர்ந்து,

ஒரு குழுவினர் பிரசவ அறையில் நுழைந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நிலைமைய சமாளிக்க பொலிஸாரை நாடியபோதும், தனிப்பட்டமுறையில் தன்னை குறிவைத்து தாக்கியதாகவும் தன்னை கொலையாளி என அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

தனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் சில தரப்பினர் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே தனக்கு இடமாற்றம் வேண்டும் எனக் கூறி அவர் கடிதத்தை கையளித்துள்ளார். 

மன்னாரில் தாய், சேய் உயிரிழப்பு விவகாரம் : உயர் அச்சுறுத்தல் இருப்பதாக வைத்தியர் குற்றச்சாட்டு மன்னாரில் பிரசவத்திற்கான அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது அம்மாவட்டத்தின்  வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா இடமாற்றம் கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனக்கு உயர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அவர் இந்த கடிதத்தை கையளித்துள்ளார். குறித்த கடிதத்தில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தொடர்ந்து, ஒரு குழுவினர் பிரசவ அறையில் நுழைந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். நிலைமைய சமாளிக்க பொலிஸாரை நாடியபோதும், தனிப்பட்டமுறையில் தன்னை குறிவைத்து தாக்கியதாகவும் தன்னை கொலையாளி என அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் சில தரப்பினர் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே தனக்கு இடமாற்றம் வேண்டும் எனக் கூறி அவர் கடிதத்தை கையளித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now