• Apr 16 2026

வெள்ளத்தில் மூழ்கிய மன்னார் – யாழ் வீதி ! - பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை !

Ziya / Nov 29th 2025, 11:26 am
image

மன்னார் – யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மல்வத்து ஓயாவின் ஆற்று வெள்ளம் மன்னார் மாவட்டத்தின் பல  இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக ஏ-32 வீதி மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக , குறித்த வீதியூடாக பெரிய மற்றும் சிறிய வாகனங்களில் பயணம் செய்வதை முற்றாக தவிர்க்குமாறு பயணிகள் மற்றும் பொதுமக்கள்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கிய மன்னார் – யாழ் வீதி - பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை மன்னார் – யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்  பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மல்வத்து ஓயாவின் ஆற்று வெள்ளம் மன்னார் மாவட்டத்தின் பல  இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.இதற்கு அமைவாக ஏ-32 வீதி மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதன் காரணமாக , குறித்த வீதியூடாக பெரிய மற்றும் சிறிய வாகனங்களில் பயணம் செய்வதை முற்றாக தவிர்க்குமாறு பயணிகள் மற்றும் பொதுமக்கள்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.ஆகையால்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement