• Nov 28 2024

மன்னார் மடுத்தாயாரின் திருச் சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழா நினைவு தபால் முத்திரை வெளியீடு!

Tamil nila / Jul 1st 2024, 7:52 pm
image

மடுத்தாயாரின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி  நினைவு தபால் முத்திரை இன்று  காலை வெளியீடு  செய்யப்பட்டது.

மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இவ்வாறு வெளியீடு செய்யப்பட்டது.

 மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் மடு அன்னை அரசியாக முடி சூட்டப் பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இன்று(01) மடு திருத்தலத்தில் வைத்து வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை  எஸ்.அன்ரனி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் இன்றுமுற்பகல்  இந்த நிகழ்வு நடைபெற்றது.

தபால் மா அதிபர் ரூவன் சத்குமாரவினால் விசேட முத்திரை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தபால் திணைக்கள அதிகாரிகள், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பிந்து மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் மடுத்தாயாரின் திருச் சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழா நினைவு தபால் முத்திரை வெளியீடு மடுத்தாயாரின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி  நினைவு தபால் முத்திரை இன்று  காலை வெளியீடு  செய்யப்பட்டது.மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இவ்வாறு வெளியீடு செய்யப்பட்டது. மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது.இந்நிலையில் மடு அன்னை அரசியாக முடி சூட்டப் பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இன்று(01) மடு திருத்தலத்தில் வைத்து வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளது.மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை  எஸ்.அன்ரனி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் இன்றுமுற்பகல்  இந்த நிகழ்வு நடைபெற்றது.தபால் மா அதிபர் ரூவன் சத்குமாரவினால் விசேட முத்திரை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் தபால் திணைக்கள அதிகாரிகள், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பிந்து மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement