• Nov 23 2024

மன்னார் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய பொலிஸார் - ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Chithra / May 27th 2024, 2:59 pm
image


மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  புதையல் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை இன்றைய தினம்   காலை இடம்பெற்றது.

பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  புதையல் தோண்டியதாக கூறப்படும் நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஸ்கேனர் இயந்திரம் உட்பட புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.

பேசாலை பொலிஸார் குறித்த 8 பேரையும் விசாரணைகளின் பின், மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில், குறித்த நபர்களை இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் குறித்த காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இடத்தில் அகழ்வு பணியை முன்னெடுக்க பேசாலை பொலிஸாரின் கோரிக்கைக்கு, நீதவான் அனுமதி வழங்கினார்.

அதையடுத்து மன்னார், பேசாலை பொலிஸார் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றது.

பெக்கோ இயந்திரம் பயன்படுத்தி அகழ்வு பணிகள் நடைபெற்றபோதும் எவ்வித பொருட்களும் அங்கு மீட்கப்படவில்லை.

மேலும் அகழ்வு பணியின் போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி வழங்கவில்லை.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குறித்த 8 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய பொலிஸார் - ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  புதையல் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை இன்றைய தினம்   காலை இடம்பெற்றது.பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  புதையல் தோண்டியதாக கூறப்படும் நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்களிடம் இருந்து ஸ்கேனர் இயந்திரம் உட்பட புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.பேசாலை பொலிஸார் குறித்த 8 பேரையும் விசாரணைகளின் பின், மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில், குறித்த நபர்களை இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.மேலும் குறித்த காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இடத்தில் அகழ்வு பணியை முன்னெடுக்க பேசாலை பொலிஸாரின் கோரிக்கைக்கு, நீதவான் அனுமதி வழங்கினார்.அதையடுத்து மன்னார், பேசாலை பொலிஸார் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றது.பெக்கோ இயந்திரம் பயன்படுத்தி அகழ்வு பணிகள் நடைபெற்றபோதும் எவ்வித பொருட்களும் அங்கு மீட்கப்படவில்லை.மேலும் அகழ்வு பணியின் போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி வழங்கவில்லை.இதேவேளை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குறித்த 8 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement