• Apr 28 2026

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்!

shanu / Feb 12th 2026, 1:37 pm
image

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி நேற்று புதன்கிழமை(11) மதியம் 1.45 மணி அளவில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் சந்தியாகு FSC தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது. 


விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்களும் , கௌரவ விருந்தினராக மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் அசாத் அவர்களும் விசேட விருந்தினர்களாக மன்னார் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜூட் ரொகான் , மன்னார் வலயக்கல்வி பனிமனையின் விளையாட்டு உதவி கல்விபணிப்பாளர் பிரதாஸ் மற்றும் ஓப்பின் நிறுவனத்தின் குழுதலைவர் ஜேசுராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


இதன்போது பாடசாலையின் கடந்த மாதங்களில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பழைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.


அத்துடன் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்களின் இசை அணிவகுப்பு நிகழ்வு கராத்தே நிகழ்வு உள்ளடங்களாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்று வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.


மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி நேற்று புதன்கிழமை(11) மதியம் 1.45 மணி அளவில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் சந்தியாகு FSC தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது. விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்களும் , கௌரவ விருந்தினராக மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் அசாத் அவர்களும் விசேட விருந்தினர்களாக மன்னார் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜூட் ரொகான் , மன்னார் வலயக்கல்வி பனிமனையின் விளையாட்டு உதவி கல்விபணிப்பாளர் பிரதாஸ் மற்றும் ஓப்பின் நிறுவனத்தின் குழுதலைவர் ஜேசுராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது பாடசாலையின் கடந்த மாதங்களில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பழைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.அத்துடன் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்களின் இசை அணிவகுப்பு நிகழ்வு கராத்தே நிகழ்வு உள்ளடங்களாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்று வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement