• Oct 14 2024

சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்தில் பல குடும்பங்கள் பாதிப்பு

Anaath / Oct 13th 2024, 1:36 pm
image

Advertisement

சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்தில் பல குடும்பங்கள் பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் இதுவரை 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் முந்தல் மஹாகும்புக்கடவல, நாத்தாண்டி தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய 05 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 45 கிராம சேவரக்ள் பிரிவுகளில் 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  04 கிராம சேவகர் பிரிவுகளில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  25 கிராம சேவகர் பிரிவுகளில் 647 குடும்பங்களைச் சேர்ந்த 2441பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  04 கிராம சேவகர் பிரிவுகளில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  09 கிராம சேவகர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்தில் பல குடும்பங்கள் பாதிப்பு சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்தில் பல குடும்பங்கள் பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் இதுவரை 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் முந்தல் மஹாகும்புக்கடவல, நாத்தாண்டி தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய 05 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 45 கிராம சேவரக்ள் பிரிவுகளில் 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  04 கிராம சேவகர் பிரிவுகளில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  25 கிராம சேவகர் பிரிவுகளில் 647 குடும்பங்களைச் சேர்ந்த 2441பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  04 கிராம சேவகர் பிரிவுகளில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  09 கிராம சேவகர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement