• Jan 13 2025

ஜனாதிபதி மீது கடற் தொழில் சமூகம் நம்பிக்கை வைத்துள்ளது : சம்மேளனப் பிரதிநிதி மகேசன்

Tharmini / Dec 30th 2024, 10:25 am
image

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது கடற்த் தொழில் சமூகம் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் அந்த  நம்பிக்கையை காப்பாற்றுவார் என நம்புவதாக யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதி மகேசன் தெரிவித்தார்.

யாழில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் எமது ஜனாதிபதி இந்திய விஜயம் செய்திருந்த நிலையில் இந்தியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்தார். 

சந்திப்பின் பின்னர் ஊடகங்கள் வாயிலாக சட்டவிரோத இரட்டை மாடி இழுவைமடி தொழில்களை நிறுத்த வேண்டும் என இந்திய தரப்புகளுடன் பேசியதாக அறிந்து கொண்டோம்.

அதனை நாம் வரவேற்பதோடு பேசப்பட்ட விடயங்கள் நடைமுறையில் சாத்தியமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவரிடம் முன்வைக்கிறோம். 

மேலும், சீன அரசாங்கத்தினால் முன்னாள் கடத் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் கிடைக்கப் பெற்ற ஒரு தொகுதி வலைகள் மீனவ சமூகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. 

சில மாதங்களாக குறித்த வேலைகள் வழங்கப்படாது  இருந்த நிலையில் புதிய கடற் தொழில் அமைச்சர் சந்திரசேகரனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய விரைவாக அதனை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

ஜனாதிபதி மீது கடற் தொழில் சமூகம் நம்பிக்கை வைத்துள்ளது : சம்மேளனப் பிரதிநிதி மகேசன் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது கடற்த் தொழில் சமூகம் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் அந்த  நம்பிக்கையை காப்பாற்றுவார் என நம்புவதாக யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதி மகேசன் தெரிவித்தார்.யாழில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் எமது ஜனாதிபதி இந்திய விஜயம் செய்திருந்த நிலையில் இந்தியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்தார். சந்திப்பின் பின்னர் ஊடகங்கள் வாயிலாக சட்டவிரோத இரட்டை மாடி இழுவைமடி தொழில்களை நிறுத்த வேண்டும் என இந்திய தரப்புகளுடன் பேசியதாக அறிந்து கொண்டோம்.அதனை நாம் வரவேற்பதோடு பேசப்பட்ட விடயங்கள் நடைமுறையில் சாத்தியமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவரிடம் முன்வைக்கிறோம். மேலும், சீன அரசாங்கத்தினால் முன்னாள் கடத் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் கிடைக்கப் பெற்ற ஒரு தொகுதி வலைகள் மீனவ சமூகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக குறித்த வேலைகள் வழங்கப்படாது  இருந்த நிலையில் புதிய கடற் தொழில் அமைச்சர் சந்திரசேகரனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய விரைவாக அதனை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement