மக்களின் நிதிப் பங்களிப்போடு புனரமைக்கப்பட்ட நெல்லியடி கோவிற்சந்தை திறப்பு விழா இன்று காலை 10:30 மணியளவில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்சநாதன் தலமையில் ஆரம்பமானது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து தேசியக்கொடி, பிரதேச சபை கொடி என்பன ஏற்றப்பட்டதை தொடர்ந்து மக்களின் பூரண நிதி பங்களிப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட சந்தையின் இறைச்சிக்கடை, மீன் சந்தை தொகுதிகளை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் தலமை உரையை நிகழ்வின் தலைவரும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் நிகழ்த்தியதை தொடர்ந்து கருத்துரைகளை நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் நடராசா திருலிங்கநாதன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செல்லத்துரை பிரணவநாதன், கோயிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவு சங்க தலைவர் சட்டத்தரணி மகிந்தன், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் உட்பட பலரும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் கோயில் சந்தை பிரதேச மக்கள், கோயிற்சந்தை பிரதேச அபிவிருத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசம் சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கபந்துகொண்டனர்.குறித்த சந்தை தற்காலிக கொட்டகையில் பலகாலமாக இயங்கிவந்திருந்த நிலையிலே மக்களால் நிதி ஒளபுங்கமைக்கப்பட்டு புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
யாழில் மக்களின் நிதிப் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட சந்தை தொகுதி மக்களின் நிதிப் பங்களிப்போடு புனரமைக்கப்பட்ட நெல்லியடி கோவிற்சந்தை திறப்பு விழா இன்று காலை 10:30 மணியளவில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்சநாதன் தலமையில் ஆரம்பமானது.இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தேசியக்கொடி, பிரதேச சபை கொடி என்பன ஏற்றப்பட்டதை தொடர்ந்து மக்களின் பூரண நிதி பங்களிப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட சந்தையின் இறைச்சிக்கடை, மீன் சந்தை தொகுதிகளை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் தலமை உரையை நிகழ்வின் தலைவரும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் நிகழ்த்தியதை தொடர்ந்து கருத்துரைகளை நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் நடராசா திருலிங்கநாதன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செல்லத்துரை பிரணவநாதன், கோயிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவு சங்க தலைவர் சட்டத்தரணி மகிந்தன், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் உட்பட பலரும் நிகழ்த்தினர். இந்நிகழ்வில் கோயில் சந்தை பிரதேச மக்கள், கோயிற்சந்தை பிரதேச அபிவிருத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசம் சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கபந்துகொண்டனர்.குறித்த சந்தை தற்காலிக கொட்டகையில் பலகாலமாக இயங்கிவந்திருந்த நிலையிலே மக்களால் நிதி ஒளபுங்கமைக்கப்பட்டு புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது