எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 09 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை (2) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இவ் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் -
கடந்த முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்டு நான்கு சபைகளை கைப்பற்றி இருந்தது.
இம்முறை நடைபெற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் 5 சபைகளை கைப்பற்றும் என தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 136 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 09 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை (2) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இவ் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.இதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் -கடந்த முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்டு நான்கு சபைகளை கைப்பற்றி இருந்தது.இம்முறை நடைபெற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் 5 சபைகளை கைப்பற்றும் என தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 136 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.