முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு உள்ளூராட்சி சபைக்குரிய வேட்புமனுப் பத்திரங்களை இன்று இலங்கைத் தமிழரசுக்கட்சி கையளித்தது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான துரைராசா ரவிகரனால் குறித்த வேட்புமனுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
மேலும் நேற்றையதினம் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மாந்தைகிழக்கு உள்ளூராட்சி சபைக்குரிய வேட்புமனுவை கையளித்தது தமிழரசு முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு உள்ளூராட்சி சபைக்குரிய வேட்புமனுப் பத்திரங்களை இன்று இலங்கைத் தமிழரசுக்கட்சி கையளித்தது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான துரைராசா ரவிகரனால் குறித்த வேட்புமனுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. மேலும் நேற்றையதினம் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.