முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ்மா தேசபந்து தென்னகோன், நேற்று காலை தனது சட்டத்தரணிகளுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று(20) வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
குறித்த உத்தரவுக்கு அமைவாக தேசபந்து தென்னகோன் நேற்று மதியம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
அதற்கமைய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசபந்து தென்னகோனிற்கு விளக்கமறியல் நீடிப்பு. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ்மா தேசபந்து தென்னகோன், நேற்று காலை தனது சட்டத்தரணிகளுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று(20) வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார். குறித்த உத்தரவுக்கு அமைவாக தேசபந்து தென்னகோன் நேற்று மதியம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். அதற்கமைய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.