• Nov 28 2024

பாரிய மண்சரிவு - பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பஸ்..! samugammedia

Chithra / Dec 8th 2023, 12:06 pm
image


நுவரெலியா - கினிகத்தேனை பகுதியில் நேற்று  மாலை பெய்த கடும் மழை காரணமாக ஹட்டன், கொழும்பு பிரதான வீதியின் தியகலை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  

நேற்று நுவரெலியா மாவட்டத்திலும் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்தமையால் நேற்று இரவு எட்டு மணியளவில் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த மண்சரிவினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையினால், இன்று (08) காலை ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து தியகலை பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளதனால் ஹட்டன், கொழும்பு மற்றும் ஹட்டன் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை கண்டியில் இருந்து லக்‌ஷபான ஊடாக ஹட்டன் நோக்கி பயணித்த ஹட்டன்  டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியோர பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்திற்கு வழிவிடச் சென்ற போது, ​​குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததாகவும், இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.


பாரிய மண்சரிவு - பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பஸ். samugammedia நுவரெலியா - கினிகத்தேனை பகுதியில் நேற்று  மாலை பெய்த கடும் மழை காரணமாக ஹட்டன், கொழும்பு பிரதான வீதியின் தியகலை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  நேற்று நுவரெலியா மாவட்டத்திலும் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்தமையால் நேற்று இரவு எட்டு மணியளவில் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.குறித்த மண்சரிவினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையினால், இன்று (08) காலை ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து தியகலை பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளதனால் ஹட்டன், கொழும்பு மற்றும் ஹட்டன் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.இதேவேளை கண்டியில் இருந்து லக்‌ஷபான ஊடாக ஹட்டன் நோக்கி பயணித்த ஹட்டன்  டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியோர பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இவ்வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்திற்கு வழிவிடச் சென்ற போது, ​​குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததாகவும், இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement