முள்ளிவாய்க்கால் இன அழிப்பை உலகெங்கும் பெரும் அளவு வெளிப்படுத்தி நிற்பதற்கு ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி ந.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு அவர் அனுப்பிய ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன அழிப்பும் யுத்தமும் நடந்து கொண்டிருந்த காலத்தில் கார்த்திகை 27 இல் மாவீரர்களின் நினைவு கூறும் நாளாக ஈழத்தில் பதிவு செய்தார் எம் தலைவர்,
அரச படைகளில் இருந்த சிங்கள வெறியர்கள் கொடூர யுத்தத்தையும், இன அழிப்பையும் நடாத்தி முடித்தனர்.
நீதி தேடிய யுத்தம் முள்ளிவாய்க்கால் மண்ணிலே முடிவுற்றது, அன்றைய நாள் தான் மே,18,
ஈழமண்னிலே இருப்பவர்களும், புலம்பெயர் தேசத்திலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட மே18 மறக்மாட்டார்கள். மறக்கவும் முடியாது.
கொடூர யுத்தமும், இன அழிப்பும் உச்சம் பெற்ற அந்த ஒரு வாரம், வயிற்றுப் பசியை போக்க. கஞ்சிக்கும், தாகம் தீர்க்க உப்பில்லா கொதி நீருக்கும். வரிசையிலே நின்ற போது இன வெறியர்களால் ஏவப்பட்ட அணு குண்டுகளுக்கும், விமானத் தாக்குதலுக்கும் இலக்காகி கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டனர்.
அதேநேரம். உப்பில்லா கஞ்சியும் கிடைத்தவர் பாதி, கிடைக்காமல், கிடைத்ததையும் அருந்தாமல் மரணித்தவர்கள் ஏராளம். அவற்றை நினைவு கூறும் முகமாகவும், இலங்கை அரசின் இன அழிப்பை உலகெங்கும் எடுத்துக் காட்டும் முகமாகவும் மே12 இல் இருந்து 18, வரை இனப்படுகொலை வாரமாக. நினைவு கூறுகின்றோம்.
அது மட்டுமல்ல மே 18, முள்ளிவாய்க்கால் மண்ணிலே புதைக்கப்பட்டும், தசை பிண்டங்களாக விட்டுச் சென்ற எம் உறவுகளை நினைவு கூறும் நேரத்தில் இரத்தக்-கண்ணர் ஆறாக பெருகி ஓடும் நாள்.
இனப்படுகொலை பேரழிவோடு வாழ்ந்து, வெளியேறி வலிமையோடும், துணிவோடும், நீதி தேடி போராடி வாழ்ந்து வருகின்றோமே , தவிர அன்றைய, காயங்கள் வடுக்கள் மாறவே மாறாது.
இறுதி நாட்களில் உயிர் தப்பி பிழைத்தவர்கள் இன்னும் மன நிலை பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இருந்தும் விடாமுயற்சியுடனும் உறுதியுடனும் பயணித்து கொண்டிருக்கும் எமது அமைப்பு மே12 தொடக்கம் 17 வரை இனப்படுகொலை கஞ்சி வாரத்தினை தொடரும் என்பதனை எட்டு மாவட்டங்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்வதுடன், இந் நாட்களில் ஆதரவு தர வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக மட்ட அமைப்புக்கள். தமிழ் தேசியத்தோடும், உணர்வோடும் பயணிப்பவர்கள் எல்லோரும் கலந்து கொண்டு உச்சம் பெற்ற இன அழிப்பை - உலகெங்கும் பெரும் அளவு வெளிப்படுத்தி நிற்போம் வாருங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை உலகெங்கும் பெருமளவு வெளிப்படுத்தி நிற்போம் வாருங்கள்-கனகரஞ்சினி அழைப்பு. முள்ளிவாய்க்கால் இன அழிப்பை உலகெங்கும் பெரும் அளவு வெளிப்படுத்தி நிற்பதற்கு ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி ந.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு அவர் அனுப்பிய ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இன அழிப்பும் யுத்தமும் நடந்து கொண்டிருந்த காலத்தில் கார்த்திகை 27 இல் மாவீரர்களின் நினைவு கூறும் நாளாக ஈழத்தில் பதிவு செய்தார் எம் தலைவர்,அரச படைகளில் இருந்த சிங்கள வெறியர்கள் கொடூர யுத்தத்தையும், இன அழிப்பையும் நடாத்தி முடித்தனர். நீதி தேடிய யுத்தம் முள்ளிவாய்க்கால் மண்ணிலே முடிவுற்றது, அன்றைய நாள் தான் மே,18,ஈழமண்னிலே இருப்பவர்களும், புலம்பெயர் தேசத்திலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட மே18 மறக்மாட்டார்கள். மறக்கவும் முடியாது. கொடூர யுத்தமும், இன அழிப்பும் உச்சம் பெற்ற அந்த ஒரு வாரம், வயிற்றுப் பசியை போக்க. கஞ்சிக்கும், தாகம் தீர்க்க உப்பில்லா கொதி நீருக்கும். வரிசையிலே நின்ற போது இன வெறியர்களால் ஏவப்பட்ட அணு குண்டுகளுக்கும், விமானத் தாக்குதலுக்கும் இலக்காகி கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டனர். அதேநேரம். உப்பில்லா கஞ்சியும் கிடைத்தவர் பாதி, கிடைக்காமல், கிடைத்ததையும் அருந்தாமல் மரணித்தவர்கள் ஏராளம். அவற்றை நினைவு கூறும் முகமாகவும், இலங்கை அரசின் இன அழிப்பை உலகெங்கும் எடுத்துக் காட்டும் முகமாகவும் மே12 இல் இருந்து 18, வரை இனப்படுகொலை வாரமாக. நினைவு கூறுகின்றோம்.அது மட்டுமல்ல மே 18, முள்ளிவாய்க்கால் மண்ணிலே புதைக்கப்பட்டும், தசை பிண்டங்களாக விட்டுச் சென்ற எம் உறவுகளை நினைவு கூறும் நேரத்தில் இரத்தக்-கண்ணர் ஆறாக பெருகி ஓடும் நாள்.இனப்படுகொலை பேரழிவோடு வாழ்ந்து, வெளியேறி வலிமையோடும், துணிவோடும், நீதி தேடி போராடி வாழ்ந்து வருகின்றோமே , தவிர அன்றைய, காயங்கள் வடுக்கள் மாறவே மாறாது.இறுதி நாட்களில் உயிர் தப்பி பிழைத்தவர்கள் இன்னும் மன நிலை பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தும் விடாமுயற்சியுடனும் உறுதியுடனும் பயணித்து கொண்டிருக்கும் எமது அமைப்பு மே12 தொடக்கம் 17 வரை இனப்படுகொலை கஞ்சி வாரத்தினை தொடரும் என்பதனை எட்டு மாவட்டங்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்வதுடன், இந் நாட்களில் ஆதரவு தர வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக மட்ட அமைப்புக்கள். தமிழ் தேசியத்தோடும், உணர்வோடும் பயணிப்பவர்கள் எல்லோரும் கலந்து கொண்டு உச்சம் பெற்ற இன அழிப்பை - உலகெங்கும் பெரும் அளவு வெளிப்படுத்தி நிற்போம் வாருங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.