• Apr 02 2025

நாவலப்பிட்டியில் பாரிய மண்மேடு சரிவு - போக்குவரத்து முற்றாக பாதிப்பு

Chithra / Nov 29th 2024, 11:32 am
image

 

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று  அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

அத்துடன், நாவலப்பிட்டியின் பல பகுதிகளில் மரங்கள் மண்மேடு இணைந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக மலையக ரயில் சேவையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் நான்காவது நாளாக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நேற்று கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் இரவு தபால் ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அந்த நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நாவலப்பிட்டியில் பாரிய மண்மேடு சரிவு - போக்குவரத்து முற்றாக பாதிப்பு  நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று  அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.அத்துடன், நாவலப்பிட்டியின் பல பகுதிகளில் மரங்கள் மண்மேடு இணைந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக மலையக ரயில் சேவையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் நான்காவது நாளாக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.நேற்று கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் இரவு தபால் ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.மேலும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அந்த நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement