மோசமான வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வினாடிக்கு 11,800 கன அடி நீர், கலா ஓயாவிற்கு திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த நீர் நிலையை அண்மித்த மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் தொடர்ந்து வடிந்து வருகின்றது.
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் மட்டத்தை நெருங்கி வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு மோசமான வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் வினாடிக்கு 11,800 கன அடி நீர், கலா ஓயாவிற்கு திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக குறித்த நீர் நிலையை அண்மித்த மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் தொடர்ந்து வடிந்து வருகின்றது.காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் மட்டத்தை நெருங்கி வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.