• Nov 10 2024

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு; இலங்கை தமிழர்கள் இருவரும் உயிரிழப்பு!

Chithra / Aug 1st 2024, 7:46 am
image


இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு  இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் இரண்டு தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது.

இந்த மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த மண்சரிவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை வாழும் காளிதாஸ் மற்றும் கூடலூர் அய்யன்கொள்ளியில் வாழும் கல்யாணக் குமார் ஆகியோர் கேரளா வயநாடு நிலசரிவில் சிக்கி உயிரிழந்துள்ளமை கவலையளிக்கிறது.

கேரள வயநாடு பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், 120இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளமையை மிகவும் கவலைக்குரியதாகும். விரைவில் இந்த இயற்கை இடரில் இருந்து கேரளா மாநிலம் மீள வேண்டும்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்த பல மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் எதிர்கொண்டிருந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நான் ஆராய அங்கு சென்றிருந்தேன். 

அந்த பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கும் கொண்டுவந்திருந்தேன்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள கூடலூர் காளிதாஸ் மற்றும் கல்யாணக் குமாரி ஆகியோர் நான் கூடலூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் எனது கூட்டத்திற்கு சமூகமளித்தது என் மனதில் நினைவளிக்கிறது. 

எதிர்பாராது ஏற்பட்டுள்ள இவர்களது இழப்பு கவலையளிப்பதுடன், இவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். என செந்தில் தொண்டமான் பதிவிட்டுள்ளார்

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு; இலங்கை தமிழர்கள் இருவரும் உயிரிழப்பு இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு  இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் இரண்டு தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.குறித்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது.இந்த மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், இந்த மண்சரிவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அந்தப் பதிவில்,சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை வாழும் காளிதாஸ் மற்றும் கூடலூர் அய்யன்கொள்ளியில் வாழும் கல்யாணக் குமார் ஆகியோர் கேரளா வயநாடு நிலசரிவில் சிக்கி உயிரிழந்துள்ளமை கவலையளிக்கிறது.கேரள வயநாடு பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், 120இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளமையை மிகவும் கவலைக்குரியதாகும். விரைவில் இந்த இயற்கை இடரில் இருந்து கேரளா மாநிலம் மீள வேண்டும்.நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்த பல மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் எதிர்கொண்டிருந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நான் ஆராய அங்கு சென்றிருந்தேன். அந்த பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கும் கொண்டுவந்திருந்தேன்.இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள கூடலூர் காளிதாஸ் மற்றும் கல்யாணக் குமாரி ஆகியோர் நான் கூடலூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் எனது கூட்டத்திற்கு சமூகமளித்தது என் மனதில் நினைவளிக்கிறது. எதிர்பாராது ஏற்பட்டுள்ள இவர்களது இழப்பு கவலையளிப்பதுடன், இவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். என செந்தில் தொண்டமான் பதிவிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement