• Feb 12 2025

மாவையின் மரணம்; எம்மீது திட்டமிடப்பட்டு விசமபிரச்சாரங்கள்; சீ.வீ.கே.சிவஞானம் ஆதங்கம்..!

Sharmi / Feb 11th 2025, 10:14 am
image

மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை.சேனாதிராஜாவின் மரணம் தொடர்பில் எம்மீது திட்டமிட்ட வகையில் பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று யாழ்.இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்குச் செல்வதற்காக கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எனது வீட்டிற்கு வருகை தந்திருந்தார். 

அன்றையதினம் நானும், அவரும் சுகயீனமுற்றிருந்த சேனாதிராசாவை நேரில் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தோம்.

அப்போது அவருடைய உடல் நலன்கள் குறித்தே கலந்துரையாடினோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவருடன் கட்சி சார்ந்த விடயங்களையோ அரசியல் சார்ந்த விடயங்களையோ பேசியிருக்கவில்லை.

மேலும், அவர் எம்முடன் அன்னியோன்யமாகவே உரையாடினார். நாம் விடைபெற்றபோது தனது உடல் நலக் குறைவைக் கூடப் பொருட்படுத்தாது எம்மை வழியனுப்பி வைப்பதற்காக வரமுயன்றிருந்தார். 

உண்மை அப்படி இருக்கின்றபோது எமக்கு எதிராக விசமத்தனமான பரப்புரைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, சசிகலா ரவிராஜ் உள்ளிட்டவர்கள் கூட நாம் சேனாதிராசாவுக்கு அழுத்தங்களை பிரயோகித்தோம் என்ற தொனிப்பட கருத்துக்களை தெரிவித்தமை வருத்தமளிப்பதாக உள்ளது.

இதனையடுத்தே எமது கட்சியின் மத்திய குழுவின் அங்கத்தவர்களான 18 பேரின் புகைப்படங்களுடன் கூடி பதாகையொன்று சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

அதில் நாம் தான் மாவை.சேனாதிராசாவின் இறப்புக்குக் காரணமானவர்கள் என்ற அடிப்படையில் வசனங்களும் எழுதப்பட்டிருந்தன.

அந்தப் பாதாகை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். 

அதுமட்டுமன்றி, இந்த விடயங்களுக்குப் பின்னால் கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல. எமக்கு எதிரான கட்சிகளில் உள்ளவர்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல சக்திகள் உள்ளன.

இந்தச்சக்திகள் தமிழ் அரசுக் கட்சியைப் பிளவடையச் செய்யவேண்டும் அல்லது அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்கவேண்டும் என்று செயற்படுகின்ற தரப்புக்களாகும். 

ஆகவே, இந்த விடயங்கள் சம்பந்தமாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றபோது பின்னணியில் உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள்.

மாவை.சேனாதிராசாவுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது. 

ஆகவே அவருடைய இறப்புக்கு நான் ஒருபோதும் காரணமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மாவையின் மரணம்; எம்மீது திட்டமிடப்பட்டு விசமபிரச்சாரங்கள்; சீ.வீ.கே.சிவஞானம் ஆதங்கம். மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை.சேனாதிராஜாவின் மரணம் தொடர்பில் எம்மீது திட்டமிட்ட வகையில் பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று யாழ்.இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்குச் செல்வதற்காக கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எனது வீட்டிற்கு வருகை தந்திருந்தார். அன்றையதினம் நானும், அவரும் சுகயீனமுற்றிருந்த சேனாதிராசாவை நேரில் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தோம்.அப்போது அவருடைய உடல் நலன்கள் குறித்தே கலந்துரையாடினோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவருடன் கட்சி சார்ந்த விடயங்களையோ அரசியல் சார்ந்த விடயங்களையோ பேசியிருக்கவில்லை.மேலும், அவர் எம்முடன் அன்னியோன்யமாகவே உரையாடினார். நாம் விடைபெற்றபோது தனது உடல் நலக் குறைவைக் கூடப் பொருட்படுத்தாது எம்மை வழியனுப்பி வைப்பதற்காக வரமுயன்றிருந்தார். உண்மை அப்படி இருக்கின்றபோது எமக்கு எதிராக விசமத்தனமான பரப்புரைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, சசிகலா ரவிராஜ் உள்ளிட்டவர்கள் கூட நாம் சேனாதிராசாவுக்கு அழுத்தங்களை பிரயோகித்தோம் என்ற தொனிப்பட கருத்துக்களை தெரிவித்தமை வருத்தமளிப்பதாக உள்ளது.இதனையடுத்தே எமது கட்சியின் மத்திய குழுவின் அங்கத்தவர்களான 18 பேரின் புகைப்படங்களுடன் கூடி பதாகையொன்று சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் நாம் தான் மாவை.சேனாதிராசாவின் இறப்புக்குக் காரணமானவர்கள் என்ற அடிப்படையில் வசனங்களும் எழுதப்பட்டிருந்தன.அந்தப் பாதாகை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். அதுமட்டுமன்றி, இந்த விடயங்களுக்குப் பின்னால் கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல. எமக்கு எதிரான கட்சிகளில் உள்ளவர்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல சக்திகள் உள்ளன.இந்தச்சக்திகள் தமிழ் அரசுக் கட்சியைப் பிளவடையச் செய்யவேண்டும் அல்லது அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்கவேண்டும் என்று செயற்படுகின்ற தரப்புக்களாகும். ஆகவே, இந்த விடயங்கள் சம்பந்தமாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றபோது பின்னணியில் உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள்.மாவை.சேனாதிராசாவுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது. ஆகவே அவருடைய இறப்புக்கு நான் ஒருபோதும் காரணமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement