• Apr 04 2025

மாவீரர் நினைவேந்தல் விவகாரம்: மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளருக்கு பிணை!

Chithra / Dec 5th 2024, 4:25 pm
image

 

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவுக்குகொழும்பு, நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை கொட்டிகாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பெற்றதன் பின்னர் ரேணுகா பெரேராவை கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

தமது அரசியல் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதத்துடன் செயற்படவில்லை என அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தாம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த கடிதத்தை ரேணுக பெரேரா அனுப்பியுள்ளார்.

மாவீரர் நினைவேந்தல் விவகாரம்: மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளருக்கு பிணை  குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவுக்குகொழும்பு, நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டிருந்தார்.குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை கொட்டிகாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பெற்றதன் பின்னர் ரேணுகா பெரேராவை கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமது அரசியல் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதத்துடன் செயற்படவில்லை என அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தாம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த கடிதத்தை ரேணுக பெரேரா அனுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement