• Dec 10 2025

திருமலை கடற்கரையில் மீண்டும் வந்தமர்ந்த புத்தர் அமைதிக்குப் பங்கம் என மேயர் பொலிஸில் முறைப்பாடு

dorin / Nov 17th 2025, 7:32 pm
image

திருகோணமலை கடற்கரையில் மாநகர சபைக்குச் சொந்தமான பகுதியில் முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலத்தில் மீண்டும் இன்று பிற்பகல் புத்தர் சிலை வைக்கப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெற்றன.

 சட்ட அனுமதி இன்றி நேற்று இரவு 8 மணியளவில் இந்தப் புத்தர் சிலை இந்த இடத்தில் வைக்கப்பட்டது. 

எனினும், இரவு 11 மணியளவில் துறைமுகப் பொலிஸார், திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் வந்து பெளத்த பிக்குகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றினர்.

பின்னர் இந்தப் புத்தர்  சிலை துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு  எடுத்துச் செல்லப்பட்டு இன்று நண்பகல் வரை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

புத்தர் சிலை மீளவும் வைக்கப்படுவதற்கு சற்று முன்னர் அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவுக்கு அங்கு திரண்டிருந்த பெளத்த பிக்குமார் உட்பட சிங்கள மக்கள் அவரின் வருகையை எதிர்த்துக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து. அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கடுமையாகக் கோஷமிட்டனர். 

இதனையடுத்து அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.

இது இவ்வாறிருக்க திருகோணமலை கடற்கரையில் மாநகர சபைக்குச் சொந்தமான பகுதியில் முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலத்தில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிராகவும், இது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனத் தெரிவித்தும் திருகோணமலை மாநகர சபையின் மேயர் க.செல்வராஜா, துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

திருமலை கடற்கரையில் மீண்டும் வந்தமர்ந்த புத்தர் அமைதிக்குப் பங்கம் என மேயர் பொலிஸில் முறைப்பாடு திருகோணமலை கடற்கரையில் மாநகர சபைக்குச் சொந்தமான பகுதியில் முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலத்தில் மீண்டும் இன்று பிற்பகல் புத்தர் சிலை வைக்கப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெற்றன. சட்ட அனுமதி இன்றி நேற்று இரவு 8 மணியளவில் இந்தப் புத்தர் சிலை இந்த இடத்தில் வைக்கப்பட்டது. எனினும், இரவு 11 மணியளவில் துறைமுகப் பொலிஸார், திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் வந்து பெளத்த பிக்குகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றினர்.பின்னர் இந்தப் புத்தர்  சிலை துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு  எடுத்துச் செல்லப்பட்டு இன்று நண்பகல் வரை அங்கு வைக்கப்பட்டிருந்தது.புத்தர் சிலை மீளவும் வைக்கப்படுவதற்கு சற்று முன்னர் அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவுக்கு அங்கு திரண்டிருந்த பெளத்த பிக்குமார் உட்பட சிங்கள மக்கள் அவரின் வருகையை எதிர்த்துக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து. அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கடுமையாகக் கோஷமிட்டனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.இது இவ்வாறிருக்க திருகோணமலை கடற்கரையில் மாநகர சபைக்குச் சொந்தமான பகுதியில் முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலத்தில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிராகவும், இது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனத் தெரிவித்தும் திருகோணமலை மாநகர சபையின் மேயர் க.செல்வராஜா, துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement