• Mar 10 2026

போதைப்பொருளுடன் யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மை இன மாணவன் கைது

Chithra / Nov 17th 2025, 4:21 pm
image


யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனந்தைச் சேர்ந்த மாணவன்  ஒருவர் போதைப் பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.


யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ். பொலிஸ்  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவனே கந்தர்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


மேற்படி மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளது.


மேற்படி சந்தேக நபரை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை  எதிர்வரும் 30 திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


சம்வம் தொடர்பான மேலதிக விசாராணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருளுடன் யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மை இன மாணவன் கைது யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனந்தைச் சேர்ந்த மாணவன்  ஒருவர் போதைப் பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ். பொலிஸ்  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவனே கந்தர்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளது.மேற்படி சந்தேக நபரை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை  எதிர்வரும் 30 திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சம்வம் தொடர்பான மேலதிக விசாராணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement