• Jan 24 2025

கிழக்கு மாகாண ஆளுநர்- லங்கா IOC அதிகாரிகள் சந்திப்பு..!

Sharmi / Dec 10th 2024, 5:18 pm
image

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் லங்கா ஐஓசி  சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (10) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் குறிப்பாக திருகோணமலையில் கவனம் செலுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

ஆளுநரின் கோரிக்கையை அடுத்து, கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டுக்காக, LIOC நிறுவனத்தினர் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றையும் நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தனர்.

நிலையான அபிவிருத்திக்கான வெளிப்படையான, ஊழலற்ற அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆளுநர் தனது ஒத்துழைப்பை உறுதியளித்தார்.

லங்கா ஐஓசியின் சிரேஷ்ட முகாமைத்துவப் பணிப்பாளர்  தீபக் தாஸ் , லங்கா ஐஓசியின் சிரேஷ்ட உதவி தலைவர்( கொழும்பு) அம்பர் அஹமட் , சிரேஷ்ட உதவி தலைவர்( திருகோணமலை) நவீன் குமார், ஐஓசியின் பொறியியல் துறை ( கொழும்பு) உதவி தலைவர் சந்தீப் கப்டா மற்றும் ஐஓசியின் பொறியியல் துறை (திருகோணமலை) உதவி தலைவர் B.K. மண்டால் ஆகியோர் கலந்து கொண்டனர்






கிழக்கு மாகாண ஆளுநர்- லங்கா IOC அதிகாரிகள் சந்திப்பு. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் லங்கா ஐஓசி  சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (10) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் குறிப்பாக திருகோணமலையில் கவனம் செலுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆளுநரின் கோரிக்கையை அடுத்து, கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டுக்காக, LIOC நிறுவனத்தினர் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றையும் நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தனர்.நிலையான அபிவிருத்திக்கான வெளிப்படையான, ஊழலற்ற அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆளுநர் தனது ஒத்துழைப்பை உறுதியளித்தார்.லங்கா ஐஓசியின் சிரேஷ்ட முகாமைத்துவப் பணிப்பாளர்  தீபக் தாஸ் , லங்கா ஐஓசியின் சிரேஷ்ட உதவி தலைவர்( கொழும்பு) அம்பர் அஹமட் , சிரேஷ்ட உதவி தலைவர்( திருகோணமலை) நவீன் குமார், ஐஓசியின் பொறியியல் துறை ( கொழும்பு) உதவி தலைவர் சந்தீப் கப்டா மற்றும் ஐஓசியின் பொறியியல் துறை (திருகோணமலை) உதவி தலைவர் B.K. மண்டால் ஆகியோர் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement