• Aug 23 2026

வடக்கு - கிழக்கில் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமரிடம் மகஜர் கையளிப்பு!

dorin / Aug 23rd 2026, 9:52 am
image

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமரை, நிகழ்வு நிறைவடைந்த பின்னர் வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போதே காணி விடுவிப்பு தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமது பூர்வீகக் காணிகளை இழந்துள்ள மக்கள், தங்களின் நிலங்களை மீட்பதற்காக நீண்டகாலமாக வீதி வீதியாகப் போராடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு (பலாலி, வசாவிளான், மயிலிட்டி), கிளிநொச்சி, முல்லைத்தீவு (கேப்பாப்பிலவு), மட்டக்களப்பு (மயிலத்தமடு, மாதவனை) உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த அரசுகளின் காலத்தில் இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், தற்போதைய புதிய அரசின் மீதும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். எனினும், காலங்கள் கடந்தும் முழுமையான மற்றும் நீதியான தீர்வு கிடைக்கமை ஆழ்ந்த கவலையை அளிப்பதாக அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகாலப் போராட்டத்தையும் எதிர்பார்ப்புகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை உடனடியாக வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கில் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமரிடம் மகஜர் கையளிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமரை, நிகழ்வு நிறைவடைந்த பின்னர் வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதன்போதே காணி விடுவிப்பு தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமது பூர்வீகக் காணிகளை இழந்துள்ள மக்கள், தங்களின் நிலங்களை மீட்பதற்காக நீண்டகாலமாக வீதி வீதியாகப் போராடி வருகின்றனர்.யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு (பலாலி, வசாவிளான், மயிலிட்டி), கிளிநொச்சி, முல்லைத்தீவு (கேப்பாப்பிலவு), மட்டக்களப்பு (மயிலத்தமடு, மாதவனை) உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.கடந்த அரசுகளின் காலத்தில் இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், தற்போதைய புதிய அரசின் மீதும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். எனினும், காலங்கள் கடந்தும் முழுமையான மற்றும் நீதியான தீர்வு கிடைக்கமை ஆழ்ந்த கவலையை அளிப்பதாக அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகாலப் போராட்டத்தையும் எதிர்பார்ப்புகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை உடனடியாக வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement