• Jan 07 2025

கிளிநொச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மாயம்; கடற்படையினரின் உதவியுடன் தேடுதல்..!

Sharmi / Jan 3rd 2025, 12:45 pm
image

கிளிநொச்சியில் காணாமல் போன, மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தேடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும், அவரது பாதணியும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர் குளத்தில் விழுந்துள்ளாரா என்ற சந்தேகத்தில் நீச்சல் வீரர்கள் மூலம் குறித்த குளத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. 

அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் உதவியையும் நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கிளிநொச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மாயம்; கடற்படையினரின் உதவியுடன் தேடுதல். கிளிநொச்சியில் காணாமல் போன, மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தேடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கிளிநொச்சி கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும், அவரது பாதணியும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில் குறித்த நபர் குளத்தில் விழுந்துள்ளாரா என்ற சந்தேகத்தில் நீச்சல் வீரர்கள் மூலம் குறித்த குளத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் உதவியையும் நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement