• Nov 19 2024

பணியாளர்களைத் தவறாக சித்தரிக்கும் செய்திகள்; சுங்க தொழிற்சங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்!

Chithra / Nov 13th 2024, 12:18 pm
image

 

 நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மாத்திரம் நிறைவேற்ற சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 

சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்ஜீவ இதனைத் தெரிவித்துள்ளார். 

கடந்த 7 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குக் கள விஜயம் மேற்கொண்டிருந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்திடம் போலியான தகவல்களை சமர்ப்பித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது பணியாளர்களைத் தவறாக சித்தரிக்கும் வகையிலான தகவல்கள் அண்மைய சில நாட்களாக உலாவுகின்றன.

தங்களது பணிகளையும் மீறி சில சேவைகளில் சுங்க பணியாளர்கள் ஈடுபடுவதுண்டு. 

அத்தகைய செயற்பாடுகளைத் தவறாக சித்தரிக்க சிலர் முயல்கின்றனர். 

இந்தநிலையில் தங்களது கடமைகளை மாத்திரம் மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.


பணியாளர்களைத் தவறாக சித்தரிக்கும் செய்திகள்; சுங்க தொழிற்சங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்   நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மாத்திரம் நிறைவேற்ற சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்ஜீவ இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குக் கள விஜயம் மேற்கொண்டிருந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்திடம் போலியான தகவல்களை சமர்ப்பித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தங்களது பணியாளர்களைத் தவறாக சித்தரிக்கும் வகையிலான தகவல்கள் அண்மைய சில நாட்களாக உலாவுகின்றன.தங்களது பணிகளையும் மீறி சில சேவைகளில் சுங்க பணியாளர்கள் ஈடுபடுவதுண்டு. அத்தகைய செயற்பாடுகளைத் தவறாக சித்தரிக்க சிலர் முயல்கின்றனர். இந்தநிலையில் தங்களது கடமைகளை மாத்திரம் மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement