• Nov 22 2024

மத்திய வகுப்பு காணி குடியிருப்பாளர்களுக்கு காணிக்குரிய ஆவணத்தை வழங்க வேண்டும் - சாள்ஸ் எம்.பி கோரிக்கை..!samugammedia

Tharun / Jan 10th 2024, 1:01 pm
image

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் தேவிபுரம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, விசுவமடு கிழக்கு மற்றும் மேற்கு, கைவேலி, முத்துஐயன்கட்டு ஆகிய கிராமங்களில் 1600 க்கும் அதிகமான குடும்பங்கள், 35 வருடங்களாக நிரந்தர குடியிருப்பாளர்களாக மத்திய வகுப்பு காணிகளில் (எம்.சீ.சீ.லாண்ட்) எவ்வித ஆவணமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என்றும், குறித்த நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு காணிக்குரிய நிரந்தர ஆவணத்தை வழங்குவதோடு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசநல உதவித்திட்டங்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில்  பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பத்து வருடங்களுக்கு முன்னர் மத்திய வகுப்பு காணிகளில் குடியிருந்தவர்களுக்கு அரச திணைக்களங்களின் உதவிகள், நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நிறுத்தி வைத்துள்ளனர் இதை பிரதமர் அறிவாரா? என்று கேள்வி எழுப்பிய சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, காணி அமைச்சர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர் ஆகியோர் கூட்டாக கள ஆய்வு செய்து, நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு காணிக்குரிய நிரந்தர ஆவணத்தை வழங்கி, அரச நலத்திட்டங்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

மத்திய வகுப்பு காணி குடியிருப்பாளர்களுக்கு காணிக்குரிய ஆவணத்தை வழங்க வேண்டும் - சாள்ஸ் எம்.பி கோரிக்கை.samugammedia முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் தேவிபுரம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, விசுவமடு கிழக்கு மற்றும் மேற்கு, கைவேலி, முத்துஐயன்கட்டு ஆகிய கிராமங்களில் 1600 க்கும் அதிகமான குடும்பங்கள், 35 வருடங்களாக நிரந்தர குடியிருப்பாளர்களாக மத்திய வகுப்பு காணிகளில் (எம்.சீ.சீ.லாண்ட்) எவ்வித ஆவணமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என்றும், குறித்த நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு காணிக்குரிய நிரந்தர ஆவணத்தை வழங்குவதோடு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசநல உதவித்திட்டங்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில்  பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பத்து வருடங்களுக்கு முன்னர் மத்திய வகுப்பு காணிகளில் குடியிருந்தவர்களுக்கு அரச திணைக்களங்களின் உதவிகள், நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நிறுத்தி வைத்துள்ளனர் இதை பிரதமர் அறிவாரா என்று கேள்வி எழுப்பிய சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, காணி அமைச்சர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர் ஆகியோர் கூட்டாக கள ஆய்வு செய்து, நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு காணிக்குரிய நிரந்தர ஆவணத்தை வழங்கி, அரச நலத்திட்டங்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement