இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவத்தில் 11 சிறுமி உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகு கவிழ்ந்ததில் அவர் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என்றும், 44 உயிரிழந்திருக்கவேண்டும் என கருதுகின்றோம் என கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு , மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு உதவி வருகின்றது.
இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியின் அபயக்குரலை செவிமடுத்தது என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள், இன்னொரு மீட்பு முயற்சிக்கு செல்லும்போதே சிறுமியின் அலறல் கேட்டதாகதெரிவித்துள்ளனர்.
குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்து விபத்து : மூன்றுநாள் கடலில் தவித்த சிறுமி இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்துச் சம்பவத்தில் 11 சிறுமி உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.படகு கவிழ்ந்ததில் அவர் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என்றும், 44 உயிரிழந்திருக்கவேண்டும் என கருதுகின்றோம் என கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு , மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு உதவி வருகின்றது.இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியின் அபயக்குரலை செவிமடுத்தது என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள், இன்னொரு மீட்பு முயற்சிக்கு செல்லும்போதே சிறுமியின் அலறல் கேட்டதாகதெரிவித்துள்ளனர்.