• Jan 07 2025

காடுகளில் இராணுவ முகாம்; மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை..! வவுனியா மக்கள் விசனம்..!

Sharmi / Dec 28th 2024, 8:52 am
image

வவுனியாவில் பெரும் காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ள நிலையில்  கால்நடைகளிற்கான மேச்சல் தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க   தலைமையில்  நேற்றையதினம்(27) இடம்பெற்றது.

இதன்போது வவுனியாவில் மேச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்தனர்.

மழை காலங்களில் அதன் நிலமை மேலும் மோசமடைவதுடன் பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுகின்றது

இராணுவம் பெரும் காடுகளில் பல ஏக்கர்கணக்கான காணிகளை பிடித்து முகாம் அமைத்துள்ளது.

ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் கால்நடைகளுக்கு மேச்சல் வரைவழங்குவதில் அதிகாரிகள் பின்னடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர். 

குளத்தின் அலைகரைப்பகுதிகளில் மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும் அரச காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்த காணிகளை பறித்து மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.


காடுகளில் இராணுவ முகாம்; மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை. வவுனியா மக்கள் விசனம். வவுனியாவில் பெரும் காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ள நிலையில்  கால்நடைகளிற்கான மேச்சல் தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க   தலைமையில்  நேற்றையதினம்(27) இடம்பெற்றது.இதன்போது வவுனியாவில் மேச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்தனர். மழை காலங்களில் அதன் நிலமை மேலும் மோசமடைவதுடன் பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுகின்றதுஇராணுவம் பெரும் காடுகளில் பல ஏக்கர்கணக்கான காணிகளை பிடித்து முகாம் அமைத்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் கால்நடைகளுக்கு மேச்சல் வரைவழங்குவதில் அதிகாரிகள் பின்னடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர். குளத்தின் அலைகரைப்பகுதிகளில் மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும் அரச காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்த காணிகளை பறித்து மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement