• Jan 26 2025

பரிசில் வழங்குவதாகக் கூறி பல லட்சம் பண மோசடி புத்தளத்தில் வசமாக சிக்கிய ஆறு இளைஞர்கள்

Thansita / Jan 11th 2025, 10:16 pm
image

புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகளைக் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தைப்பெற்று  (OTP) பண மோசடியில் 6 இளைஞர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பெறுமதியான பரிசில்கள் தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர் 

முறைப்பாட்டிற்கமைய புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று இரவு 6 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பணம் 6 கையடக்கத் தொலைபேசிகள், 9 வங்கி அட்டைகள், சிம் அட்டைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ் 6 பேரும் புத்தளம் ,பாலாவி மற்றும் கரம்பை பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுக்குற்பட்டவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.



பரிசில் வழங்குவதாகக் கூறி பல லட்சம் பண மோசடி புத்தளத்தில் வசமாக சிக்கிய ஆறு இளைஞர்கள் புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகளைக் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தைப்பெற்று  (OTP) பண மோசடியில் 6 இளைஞர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.இவ்வாறு பெறுமதியான பரிசில்கள் தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர் முறைப்பாட்டிற்கமைய புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று இரவு 6 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.இதன்போது அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பணம் 6 கையடக்கத் தொலைபேசிகள், 9 வங்கி அட்டைகள், சிம் அட்டைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இவ் 6 பேரும் புத்தளம் ,பாலாவி மற்றும் கரம்பை பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுக்குற்பட்டவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement