• Dec 21 2024

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து-மூவர் பலி- 50இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Tamil nila / Dec 21st 2024, 12:45 pm
image

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.


குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

ஹட்டன்-  பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கண்டி பகுதிக்கு சென்ற குறித்த பஸ்  இன்று  காலை 10 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 50 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.


பஸ் சாரதியின் கவனமின்மை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த பஸ்ஸில் 54 பேர் வரை பயணித்துள்ளதாகவும், இவ்விபத்தில் காயமடைந்த 50 பேர் வரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


இவ்விபத்து தொடர்பில் ஹட்டன்- பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து-மூவர் பலி- 50இற்கும் மேற்பட்டோர் படுகாயம் ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஹட்டன்-  பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கண்டி பகுதிக்கு சென்ற குறித்த பஸ்  இன்று  காலை 10 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 50 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.பஸ் சாரதியின் கவனமின்மை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.குறித்த பஸ்ஸில் 54 பேர் வரை பயணித்துள்ளதாகவும், இவ்விபத்தில் காயமடைந்த 50 பேர் வரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.இவ்விபத்து தொடர்பில் ஹட்டன்- பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement