• Dec 17 2024

பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லரை விலை - அமைச்சர் அறிவிப்பு

Chithra / Dec 17th 2024, 8:24 am
image


பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக வர்த்தகஇ வாணிபஇ உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று தெரிவித்துள்ளார். 

நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அரிசி மற்றும் தேங்காய் போன்றவற்றுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

கூடிய விரைவில் விலை மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

40 ரூபாவிற்கு விற்கப்படும் தண்ணீர் போத்தல் 100 ரூபாவிற்கும், 52 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் உப்புப் பொதி 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லரை விலை - அமைச்சர் அறிவிப்பு பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக வர்த்தகஇ வாணிபஇ உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று தெரிவித்துள்ளார். நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரிசி மற்றும் தேங்காய் போன்றவற்றுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் விலை மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.40 ரூபாவிற்கு விற்கப்படும் தண்ணீர் போத்தல் 100 ரூபாவிற்கும், 52 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் உப்புப் பொதி 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement