• Dec 06 2024

அமைச்சர் டக்ளஸ் மட்டக்களப்பிற்கு திடீர் விஜயம்- பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலும் ஆராய்வு...!

Sharmi / Aug 23rd 2024, 11:57 am
image

மக்கள் எனது கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரும் ஆதரவு தருமிடத்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளை நிச்சயமாக பெற்றுக் கொடுப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  இன்றையதினம் காலை(23) விசேட கள விஜயத்தை மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் களுதாவளை ஆரம்ப சுகாதார மருத்துவ பிரிவு வைத்தியசாலையிற்கு வருகை தந்த அமைச்சர், வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்ததார். 

பின்னர் களுதாவளையில் மூடப்பட்ட நிலையில் காணப்படும் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதுடன் , இதனை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்குரிய வேலைகளை  முன்மொழிவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



அமைச்சர் டக்ளஸ் மட்டக்களப்பிற்கு திடீர் விஜயம்- பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலும் ஆராய்வு. மக்கள் எனது கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரும் ஆதரவு தருமிடத்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளை நிச்சயமாக பெற்றுக் கொடுப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  இன்றையதினம் காலை(23) விசேட கள விஜயத்தை மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதன்பின்னர் களுதாவளை ஆரம்ப சுகாதார மருத்துவ பிரிவு வைத்தியசாலையிற்கு வருகை தந்த அமைச்சர், வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்ததார். பின்னர் களுதாவளையில் மூடப்பட்ட நிலையில் காணப்படும் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதுடன் , இதனை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்குரிய வேலைகளை  முன்மொழிவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement