• Jul 06 2024

கிளிநொச்சியில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்...!

Sharmi / Jul 3rd 2024, 3:58 pm
image

Advertisement

கிளிநொச்சி அக்ரோ ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் உற்பத்தி செயற்பாடுகள் முன்னேற்றம்  குறித்து கேட்டறிந்து கொண்டார்.

வடமாகாணத்தில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்க பட்டுக் கொண்டிருக்கும் ‘லங்காஜம்போ’ நிலக்கடலை உற்பத்தி செயற்கையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தியில்  ஏற்றுமதி இல்லாமையால் அவதியுரும் நிலை  காணப்பட்ட நிலையில் அதையறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளும் செய்து சுயதொழில் முயற்சிகள் விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தி அதை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு ஏதுவாகவும், சுய தொழில் முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்காக வும் பல்வேறு முயற்சிகள் அமைச்சரினால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் குறித்த ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக மேம்பாடுகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம். கிளிநொச்சி அக்ரோ ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் உற்பத்தி செயற்பாடுகள் முன்னேற்றம்  குறித்து கேட்டறிந்து கொண்டார்.வடமாகாணத்தில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்க பட்டுக் கொண்டிருக்கும் ‘லங்காஜம்போ’ நிலக்கடலை உற்பத்தி செயற்கையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தியில்  ஏற்றுமதி இல்லாமையால் அவதியுரும் நிலை  காணப்பட்ட நிலையில் அதையறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளும் செய்து சுயதொழில் முயற்சிகள் விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தி அதை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு ஏதுவாகவும், சுய தொழில் முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்காக வும் பல்வேறு முயற்சிகள் அமைச்சரினால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அதன் அடிப்படையில் குறித்த ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக மேம்பாடுகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement