• Nov 23 2024

கைத்தறி புடைவையில் பட்ஜெட்டை சமர்ப்பித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Tharun / Jul 23rd 2024, 6:15 pm
image

இந்திய மதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது பட்ஜெட்டை  இன்று தாக்கல் செய்தார். அணிந்திருந்த புடவை பலரின் கவனத்தை ஈர்த்தது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் திக‌தி வரை நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத்  தொடரில் பொருளாதாரம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை ஏழாவது முறையாக  தாக்கல் செய்தார்.  

வழக்கம் போல சிம்பிளான புடவையில் வந்திருந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும், தங்க நிறத்தில்  தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற துணியால் மூடப்பட்ட பாரம்பரிய பாஹி காட்டவுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.  2024 ஆம்   ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, இன்று வெள்ளை நிறம் மற்றும் நீல நிற பார்டருடன் கூடிய கைத்தறி சேலையை அணிந்து வந்திருந்தார்.  இந்த வெள்ளை நிற புடவை அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் இருந்தது.

2023 ஆம் ஆண்டு யூனியன் பட்ஜெட் தாக்கலின் போது சிவப்பு நிறத்துடன் கறுப்பு நிற கோவில் கோபுரம் போன்ற பார்டர் கொண்ட கசுதி நூல் வேலைப்பாடுகளுடன் கொண்ட புடவையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தார்.

2022 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பழுப்பு நிற பிரவுன் கலரில் கைத்தறி சேலையை அணிந்திருந்தார். அந்த சேலை சிவப்பு மற்றும் பழுப்பு நிற பிரவுன் கலர் காம்பினேஷனில் இருந்தது.

2021 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் ஆந்திர மாநிலத்தில் பெயர் போன போச்சம்பள்ளி புடவையான சிவப்பு மற்றும் வெள்ளை நிற காம்பினேஷனில், பல்லு பச்சை நிற பார்டரில் இருக்கும் அழகிய சேலையை அணிந்திருந்தார்.

2020 ஆம் ஆண்டு மங்களகரமான மாம்பழ நிறத்தில் ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையை அணிந்திருந்தார். மஞ்சள் நிறம் மங்களகரமாக இருக்கும் என்பதை இது உணர்த்துவதாக அமைந்திருந்தது.

2019 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் கோல்டன் பார்டர் இல் சிவப்பு மற்றும் பிங்க் காம்பினேஷன் மங்கலகிரி புடவையை அணிந்திருந்தார். இதுவும் ஆந்திர மாநிலத்தில் பிரபலமான சேலை வகை ஆகும. இது இவருக்கு முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும்.




நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்ட ஏழு பட்ஜெட்டிலும் அணிந்து வந்த புடவைகள், இவரின் எளிமையும் பாரம்பரியமான கைத்தறி ஆடையின் மகத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

கைத்தறி புடைவையில் பட்ஜெட்டை சமர்ப்பித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய மதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது பட்ஜெட்டை  இன்று தாக்கல் செய்தார். அணிந்திருந்த புடவை பலரின் கவனத்தை ஈர்த்தது.நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் திக‌தி வரை நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத்  தொடரில் பொருளாதாரம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை ஏழாவது முறையாக  தாக்கல் செய்தார்.  வழக்கம் போல சிம்பிளான புடவையில் வந்திருந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும், தங்க நிறத்தில்  தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற துணியால் மூடப்பட்ட பாரம்பரிய பாஹி காட்டவுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.  2024 ஆம்   ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, இன்று வெள்ளை நிறம் மற்றும் நீல நிற பார்டருடன் கூடிய கைத்தறி சேலையை அணிந்து வந்திருந்தார்.  இந்த வெள்ளை நிற புடவை அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் இருந்தது.2023 ஆம் ஆண்டு யூனியன் பட்ஜெட் தாக்கலின் போது சிவப்பு நிறத்துடன் கறுப்பு நிற கோவில் கோபுரம் போன்ற பார்டர் கொண்ட கசுதி நூல் வேலைப்பாடுகளுடன் கொண்ட புடவையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தார்.2022 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பழுப்பு நிற பிரவுன் கலரில் கைத்தறி சேலையை அணிந்திருந்தார். அந்த சேலை சிவப்பு மற்றும் பழுப்பு நிற பிரவுன் கலர் காம்பினேஷனில் இருந்தது.2021 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் ஆந்திர மாநிலத்தில் பெயர் போன போச்சம்பள்ளி புடவையான சிவப்பு மற்றும் வெள்ளை நிற காம்பினேஷனில், பல்லு பச்சை நிற பார்டரில் இருக்கும் அழகிய சேலையை அணிந்திருந்தார்.2020 ஆம் ஆண்டு மங்களகரமான மாம்பழ நிறத்தில் ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையை அணிந்திருந்தார். மஞ்சள் நிறம் மங்களகரமாக இருக்கும் என்பதை இது உணர்த்துவதாக அமைந்திருந்தது.2019 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் கோல்டன் பார்டர் இல் சிவப்பு மற்றும் பிங்க் காம்பினேஷன் மங்கலகிரி புடவையை அணிந்திருந்தார். இதுவும் ஆந்திர மாநிலத்தில் பிரபலமான சேலை வகை ஆகும. இது இவருக்கு முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும்.நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்ட ஏழு பட்ஜெட்டிலும் அணிந்து வந்த புடவைகள், இவரின் எளிமையும் பாரம்பரியமான கைத்தறி ஆடையின் மகத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement