• Sep 22 2024

வரட்சியாலும் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவு தொகை வழங்கிய அமைச்சர்...!samugammedia

Anaath / Oct 15th 2023, 5:21 pm
image

Advertisement

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வரட்சியாலும், பொருளாதார வீழ்ச்சியிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று  யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கலந்து கொண்டு 40 விவசாயிகளுக்கான முதற்கட்டமாக வழங்கி வைத்தார்.

இங்கு வரட்சியாலும், பொருளாதார ரீதியாக பின்னடைந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான தலா ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபா முதல் இருபது  ஆயிரம் ரூபா வரை இக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

மேலும் புதிதாக விவசாய ஓய்வூதியக்கொடுப்பனவுக்காக 05 நபர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர்  திருமதி பி.எச்.எம் சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, பிரதேச செயலர்கள் துறை சார் திணைக்கள தலைவர்கள் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

வரட்சியாலும் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவு தொகை வழங்கிய அமைச்சர்.samugammedia விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வரட்சியாலும், பொருளாதார வீழ்ச்சியிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று  யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றது.இதில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கலந்து கொண்டு 40 விவசாயிகளுக்கான முதற்கட்டமாக வழங்கி வைத்தார்.இங்கு வரட்சியாலும், பொருளாதார ரீதியாக பின்னடைந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான தலா ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபா முதல் இருபது  ஆயிரம் ரூபா வரை இக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.மேலும் புதிதாக விவசாய ஓய்வூதியக்கொடுப்பனவுக்காக 05 நபர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர்  திருமதி பி.எச்.எம் சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, பிரதேச செயலர்கள் துறை சார் திணைக்கள தலைவர்கள் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement