• Jan 19 2025

மியன்மார் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Jan 3rd 2025, 12:44 pm
image

 

இலங்கையிலுள்ள மியன்மார் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி முல்லைத்தீவு   கடற்பரப்பிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்த ரோகிங்யா புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டரீதியான நடைமுறைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர் இது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களின் பெயர் விபரங்களை ஏற்கனவே மியன்மார் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை அவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மியன்மார் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்  இலங்கையிலுள்ள மியன்மார் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி முல்லைத்தீவு   கடற்பரப்பிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்த ரோகிங்யா புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.சட்டரீதியான நடைமுறைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர் இது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை வெளிவிவகார அமைச்சு மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் இலங்கையில் உள்ள ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களின் பெயர் விபரங்களை ஏற்கனவே மியன்மார் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை அவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement