செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும்
தொடர்ச்சியான மழையால் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாக யாழ்.நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி வழக்கு இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் நீதவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி பகுதியைப் பார்வையிட்டனர்.
அதன்பின்னரே நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்ததாக சட்டத்தரணி பூரணி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதில் கடந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதிலிருந்து இன்று வரையான காலப்பகுதி வரை சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா அவர்களால் ஒவ்வொரு கிழமையும் கண்காணிக்கப்பட்டு வந்தது.
அத்துடன் சி.ஐ.டி சார்ந்த துறையினரால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக இன்று நீதவான் உள்ளிட்ட குழுவினரால் இந்த இடம் எவ்வாறு விட்டுச் செல்லப்பட்டதோ அவ்வாறு இன்று வரை காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்து சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா அவர்களால் புதைகுழி அகழ்வுக்கு கோரப்பட்ட நிதி குறித்த அமைச்சால் அனுமதிக்கப்பட்டு அகழ்வுப்பணியைத் தொடர குறித்த தொகை எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த இடத்தைப் பார்வையிட்ட போது இந்த இடம் ஒரு களிமண் தரையாகக் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் இந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்பாட்டாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த இடம் வெள்ளநீர் தேங்கி நிற்கும் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது. ஆகவே இந்த வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அன்றைய தினமும் இந்த கள விஜயம் இடம்பெறும். அப்போது இந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப் பொருத்தமாக இருந்தால் அகழ்வுப் பணிகள் ஆரம்பிப்பது தொடர்பில் கருத்திற்கொள்ளப்படும்.
மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு மாதிரிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்த நிபுணர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெயர்குறிக்கப்பட்ட நிபுணர்கள் மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சட்டவைத்திய அதிகாரியால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய அதனைப் பரிசீலிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறித்த இடம் தொடர்பாகவும் குறித்த வழக்கு தொடர்பாகவும் யாருக்காவது ஏதேனும் முறைப்பாடுகள் தெரிவிக்க இருந்தால் நகர்த்தல் பத்திரத்தை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றிற்கு அனுப்பி தங்கள் சார்பான விடயத்தை தெரியப்படுத்தலாம் எனவும் நீதவானால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
செம்மணி அகழ்வுப் பணிக்கு நிதி வழங்கிய அமைச்சு; மழையால் அகழ்வுகள் மேற்கொள்வதில் சிரமம் - செம்மணி வழக்கில் தீர்ப்பு செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும் தொடர்ச்சியான மழையால் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாக யாழ்.நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி வழக்கு இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் நீதவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி பகுதியைப் பார்வையிட்டனர். அதன்பின்னரே நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்ததாக சட்டத்தரணி பூரணி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதில் கடந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதிலிருந்து இன்று வரையான காலப்பகுதி வரை சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா அவர்களால் ஒவ்வொரு கிழமையும் கண்காணிக்கப்பட்டு வந்தது. அத்துடன் சி.ஐ.டி சார்ந்த துறையினரால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக இன்று நீதவான் உள்ளிட்ட குழுவினரால் இந்த இடம் எவ்வாறு விட்டுச் செல்லப்பட்டதோ அவ்வாறு இன்று வரை காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா அவர்களால் புதைகுழி அகழ்வுக்கு கோரப்பட்ட நிதி குறித்த அமைச்சால் அனுமதிக்கப்பட்டு அகழ்வுப்பணியைத் தொடர குறித்த தொகை எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த இடத்தைப் பார்வையிட்ட போது இந்த இடம் ஒரு களிமண் தரையாகக் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் இந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்பாட்டாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த இடம் வெள்ளநீர் தேங்கி நிற்கும் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது. ஆகவே இந்த வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமும் இந்த கள விஜயம் இடம்பெறும். அப்போது இந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப் பொருத்தமாக இருந்தால் அகழ்வுப் பணிகள் ஆரம்பிப்பது தொடர்பில் கருத்திற்கொள்ளப்படும். மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு மாதிரிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்த நிபுணர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெயர்குறிக்கப்பட்ட நிபுணர்கள் மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சட்டவைத்திய அதிகாரியால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய அதனைப் பரிசீலிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த இடம் தொடர்பாகவும் குறித்த வழக்கு தொடர்பாகவும் யாருக்காவது ஏதேனும் முறைப்பாடுகள் தெரிவிக்க இருந்தால் நகர்த்தல் பத்திரத்தை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றிற்கு அனுப்பி தங்கள் சார்பான விடயத்தை தெரியப்படுத்தலாம் எனவும் நீதவானால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.