2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மிஸ் க்ரேன்ட் இன்டர்நெஷனல் அழகிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பெங்கொங்கில் நடைபெற்றது.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட அழகிப் போட்டிகளில் மகுடம் சூடிய 70 அழகிகள் இப் போட்டியில் கலந்துகொள்வதற்கு தெரிவானார்கள்.
மேலும் இந்த இப் போட்டியில் இந்தியா சார்பாக பஞ்சாப் அழகியான 20 வயது மொடல் ரேச்சல் குப்தா போட்டியிட்டார்.
குறிப்பாக பாரம்பரிய உடை, நவநாகரிக உடை ஆகிய தகுதி சுற்றுகளுக்கான போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று ரேச்சல் குப்தா முதலிடத்தைப் பிடித்தார். ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகியால் மகுடம் சூட்டப்பட்டது.
12 வருடங்களாக நடைபெறும் இந்த மிஸ் க்ரேன்ட் இன்டர்நெஷனல் போட்டியில் இந்திய அழகி வெற்றியடைந்தது இதுவே முதல் தடவையாகும். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சிஜே ஒபைசா இரண்டாம் இடத்தை பிடித்தார்.
சர்வதேச மிஸ் க்ரேன்ட் இன்டர்நெஷனல் அழகிப் போட்டி- இந்திய அழகிக்கு மகுடம் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மிஸ் க்ரேன்ட் இன்டர்நெஷனல் அழகிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பெங்கொங்கில் நடைபெற்றது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட அழகிப் போட்டிகளில் மகுடம் சூடிய 70 அழகிகள் இப் போட்டியில் கலந்துகொள்வதற்கு தெரிவானார்கள்.மேலும் இந்த இப் போட்டியில் இந்தியா சார்பாக பஞ்சாப் அழகியான 20 வயது மொடல் ரேச்சல் குப்தா போட்டியிட்டார்.குறிப்பாக பாரம்பரிய உடை, நவநாகரிக உடை ஆகிய தகுதி சுற்றுகளுக்கான போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று ரேச்சல் குப்தா முதலிடத்தைப் பிடித்தார். ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகியால் மகுடம் சூட்டப்பட்டது.12 வருடங்களாக நடைபெறும் இந்த மிஸ் க்ரேன்ட் இன்டர்நெஷனல் போட்டியில் இந்திய அழகி வெற்றியடைந்தது இதுவே முதல் தடவையாகும். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சிஜே ஒபைசா இரண்டாம் இடத்தை பிடித்தார்.