இஸ்ரேல் எல்லை பகுதியில் உள்ள கோலன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கால்பந்தாட்ட மைதானம் மீது ஏவுகணைத் தாக்குதல் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த தாக்குதலினை லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்திய நிலையில் இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து வெளியிடுகையில், ஹெஸ்புல்லா அமைப்பு இதற்கு பெரிய விலையை செலுத்தியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதே வேளை லெபனானில் இஸ்ரேல் நுழைந்தால் தாங்களும் தீவிரமான போரில் இறங்குவோம் என்று ஈரான் அரசும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லெபானிற்குள் உள்ளே சென்றும், தென் லெபானிலும் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் ஆயுதகளஞ்சியங்கள் உட்பட பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள் இலக்குவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதல் - பதிலடி கொடுத்த இஸ்ரேல் இஸ்ரேல் எல்லை பகுதியில் உள்ள கோலன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கால்பந்தாட்ட மைதானம் மீது ஏவுகணைத் தாக்குதல் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே வேளை குறித்த தாக்குதலினை லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்திய நிலையில் இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது.இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து வெளியிடுகையில், ஹெஸ்புல்லா அமைப்பு இதற்கு பெரிய விலையை செலுத்தியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இதே வேளை லெபனானில் இஸ்ரேல் நுழைந்தால் தாங்களும் தீவிரமான போரில் இறங்குவோம் என்று ஈரான் அரசும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.லெபானிற்குள் உள்ளே சென்றும், தென் லெபானிலும் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் ஆயுதகளஞ்சியங்கள் உட்பட பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள் இலக்குவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.