• Jan 16 2025

காணாமல்போன வயோதிபர் கடற்பரப்பில் சடலமாக மீட்பு - மன்னாரில் சம்பவம்

Chithra / Dec 31st 2024, 9:19 am
image


மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை நேற்றுக் காலை மன்னார் பொலிஸார் மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய கூலித் தொழிலாளி என அவரின் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் அவரை குடும்ப உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் கூலித்தொழிலாளியான குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் சடலமாக காணப்பட்டார்.

மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத் பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது சடலமாக மீட்கப்பட்டவர்  அடையாளம் காணப்பட்டார்.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


காணாமல்போன வயோதிபர் கடற்பரப்பில் சடலமாக மீட்பு - மன்னாரில் சம்பவம் மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை நேற்றுக் காலை மன்னார் பொலிஸார் மீட்டனர்.சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய கூலித் தொழிலாளி என அவரின் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த குடும்பஸ்தர் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் அவரை குடும்ப உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.இந்நிலையில் கூலித்தொழிலாளியான குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் சடலமாக காணப்பட்டார்.மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத் பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது சடலமாக மீட்கப்பட்டவர்  அடையாளம் காணப்பட்டார்.சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement