• Oct 05 2024

மாயமான அரச வாகனங்கள்; பல அதிகாரிகளுக்கு எதிராக பாயவுள்ள சட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Oct 4th 2024, 9:09 am
image

Advertisement


ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பிடிக்கும் என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நிறுவனம் தொடர்பான அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்படும்.

தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த வாரம் இந்த விசாரணைகளை ஆரம்பித்தது.

தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை என தெரியவந்துள்ளது. 

இதனால், விசாரணை நடத்தும் தணிக்கை அதிகாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

மேலும், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமில்லாத வாகனங்களை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் மற்றும் முறையான நடைமுறையின்றி வாகனங்களை ஏற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

மாயமான அரச வாகனங்கள்; பல அதிகாரிகளுக்கு எதிராக பாயவுள்ள சட்டம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பிடிக்கும் என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஒவ்வொரு நிறுவனம் தொடர்பான அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்படும்.தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த வாரம் இந்த விசாரணைகளை ஆரம்பித்தது.தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால், விசாரணை நடத்தும் தணிக்கை அதிகாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமில்லாத வாகனங்களை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் மற்றும் முறையான நடைமுறையின்றி வாகனங்களை ஏற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

Advertisement